பண்டைய தமிழரின் கடல் வழி பயணம்

6 Comments



சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன்.


கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது.

ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

தமிழா-மியான்மர்

சபா சந்தகன் – மலேசியா

கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா

கடாலன் – ஸ்பெயின்

நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்

சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ

திங் வெளிர்- ஐஸ்லாந்து

கோமுட்டி-ஆப்ரிக்கா

பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.--------

ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் இப்போது தான் தெரிய வந்திருக்கிறது, அதுவும் satellite உதவியுடன். ஆனால் நம் பழந்தமிழர் இதை வழித்தடமாக கொண்டு பல நாடுகளுக்கு அப்போதே பயணித்து இருகின்றனர்.


ஏற்கனவே  நியூசிலாந்தில்

6 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : இவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.
      சில காரன்னன்களால் இந்த வலைப்பூவை தொடர்ந்து நடத்த இயலாமல் போனது. இப்போது மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை.

      Delete
  2. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_21.html?showComment=1392963937862#c5891393347810975556
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி ரூபன் .
      சில காரன்னன்களால் இந்த வலைப்பூவை தொடர்ந்து நடத்த இயலாமல் போனது. இப்போது மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை.

      Delete
  3. மிகவும் அரிய தகவல்! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  4. வலைச்சரம் மூலம் வந்தேன். நானும் தோடர்கிறேன்.

    ReplyDelete